தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஏழை எளியவருக்கு தினந்தோறும் இலவசமாக உணவளிக்கும் மனிதநேயத்தின் மறுஉருவம்!

நாமக்கல்: தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிவரும் ஒருவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக முதியோர், ஏழை, எளியோர் என நாள்தோறும் இலவசமாக உணவளித்துவரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் ஏழை எளியவர்களுக்கு இலவசமாக தினந்தோறும் உணவளிக்கும் மனிதநேயமிக்கவர்

By

Published : May 21, 2019, 1:54 PM IST

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணபாரதி கண்ணன். இவர் தனியார் நிறுவனத்தின் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர் கடந்த ஓராண்டிற்கு மேலாக வயோதிகர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஏழை, எளியோர், ஆதரவற்றோர் என ஏராளமானோர்க்கு தினந்தோறும் உணவளித்து வருகிறார். இவரது இந்த சேவையை பாராட்டி வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் இவருக்கு தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

ஏழை எளியவர்களுக்கு இலவசமாக உணவளிக்கும் மனிதநேயமிக்கவர்

இதுகுறித்து சரவணபாரதி கண்ணனிடம் கேட்டபோது, தானமாக வழங்கும் உணவிற்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரையில் செலவு செய்கிறேன். நோயாளிகள் உண்ணும் அளவிற்கு காரமில்லாமல் சமைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த உணவு தினந்தோறும் சரியான நபர்களுக்கு மட்டுமே செல்கிறது எனவும் கூறினார். இதனால் ஏழை எளியோர்களின் பசியை தன்னால் போக்கமுடிகிறது என்று சொல்லும்போது அவரது முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

நாளடைவில் இந்த சேவையை விரிவாக்கம் செய்யவுள்ளதாகவும் தற்போது ஒருவேளைக்கு வழங்கப்பட்டு வரும் உணவானது நாளடைவில் காலை முதல் மாலை வரை இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் வசதி வாய்ப்புகள் படைத்தவர்கள் தங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கும் பொருட்களை ஒரே இடத்தில் சேமித்து அதனை ஏழை எளியோர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

உணவளிக்கும் மனிதநேயமிக்கவர்

சாதாரணமாக இரண்டு மூன்று பேருக்கு உணவளித்து வந்த சூழலில் தற்போது நாளொன்றுக்கு முப்பது நாற்பது பேருக்கு உணவளித்து வருவதாக பெருமிதத்துடன் கூறுகிறார் சரவணபாரதி கண்ணன். தற்போது இதற்கு ஆகும் செலவுகளை தானும் சில சமயங்களில் நண்பர்கள் அளிக்கும் நன்கொடையை வைத்து உணவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சரவணபாரதி கண்ணனின் இச்செயலை பலரும் பாராட்டிவருகின்றனர். மனிநேயத்தின் மறுபெயர் சரவணபாரதி கண்ணன் என பெருமையுடன் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details