தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

செங்கல்பட்டில் ஐந்து காவல் துறையினருக்கு கரோனா தொற்று உறுதி! - செங்கல்பட்டில் உள்ள ஐந்து காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: பல்லாவரம் அடுத்த சங்கர்நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஐந்து காவல் துறையினருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஐந்து காவல் துறையினர் கரோனாவால் பாதிப்பு
கரோனாவால் காவல் துறையினர் பாதிப்பு

By

Published : Jun 15, 2020, 3:32 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து காவலர் ஒருவருக்கு மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற அறிகுறி தென்பட்டதால் அவர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சங்கர்நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் துறையினருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த சோதனையின் முடிவில் மேலும் நான்கு காவல் துறையினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பம்மல் நகராட்சி சார்பில் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details