திருவள்ளூர் மாவட்டம், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் மாதவன்(20). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று கொளுத்துவான்சேரி சுடுகாடு அருகே காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.8) உயிரிழந்தார்.
இது குறித்து மாங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த சூர்யா(19), சரவணன்(29), ராஜேஷ்(24), உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர்.