தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரூரில் இன்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா - கரூர் மாவட்ட அண்மை செய்திகள்

கரூர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சி அலுவலகம்
கரூர் நகராட்சி அலுவலகம்

By

Published : Jun 12, 2020, 5:42 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திரும்பிய கரூர் நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாவட்ட நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டுள்ளது.

அதேபோல் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 62 வயது ஆண், கடவூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது சேர்ந்த பெண், தாந்தோணிமலை பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண் உள்பட ஐந்து பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details