கரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - Tirupur latest News
திருப்பூர் : உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ள உடற்பயிற்சி கூடங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் மனுவாக அளித்தனர்.