தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

83 நாட்களுக்கு பின் மீண்டும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் - ராமநாதபுரம் மீனவர்கள்

ராமநாதபுரம்: கரோனா தொற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்த மீனவர்கள், 83 நாள்களுக்கு பின் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர்.

83 நாட்களுக்கு பின் கடலுக்கு செல்லும் ராமநாதபுரம் மீனவர்கள்
83 நாட்களுக்கு பின் கடலுக்கு செல்லும் ராமநாதபுரம் மீனவர்கள்

By

Published : Jun 14, 2020, 1:24 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. காரோனா ஊரடங்கு மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது முதல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. பின் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதிவரை மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லலாம் என அனுமதி வழங்கியது.

ஆனால், மீன்பிடி படகுகள் பழுது நீக்கும் வேலை, மீன்பிடி உபகரணங்கள் சரிசெய்யும் பணி முடிவடையாததால் ஜூன் 15ஆம் தேதி மீன் பிடிக்கச் செல்வதாக மீனவ சங்கங்கள் சேர்ந்து முடிவுசெய்தன.

சென்ற வாரம் வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மீனவச் சங்கப் பிரதிநிதிகள், மீன் ஏற்றுமதியாளர்கள், மீன்வளத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில் ஜூன் 13ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்வதாக மீனவச் சங்கங்கள் ஒருமனதாக முடிவு எடுத்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 13) மண்டபம், பாம்பன், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்வளத்துறையிடமிருந்து அனுமதி சீட்டு பெற்று 1300க்கும் மேற்பட்ட படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

இந்த ஆண்டு கரோனா பாதிப்பால் 24 மணி நேர மீன்பிடி முறையை 12 மணி நேரமாக மாற்றி மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அதிக மீன்கள் கிடைக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details