தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு! - பைபர் படகில் மீன் பிடித்த மீனவர்கள்

நாகை : வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு!
கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் மீட்பு!

By

Published : Jul 12, 2020, 5:24 PM IST

நாகையைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதே பகுதியில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் நான்கு பேர் ஃபைபர் படகில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகின் மீன்பிடி வலைக் கயிற்றில் சிக்கி, ஃபைபர் படகு கடலில் கவிழ்ந்தது.

இதில் ஃபைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் பாலமுருகன், ராமச்சந்திரன், சகிலன், பாக்கியராஜ் ஆகிய நான்கு மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்தனர்.

அதனைக் கண்ட சக மீனவர்கள் அவர்களையும் படகையும் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர்.

ABOUT THE AUTHOR

...view details