தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நடுக்கடலில் மூழ்கிய படகு: மூன்று பேர் மாயம்! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர்.

கடலில் மூழ்கிய மீனவர்கள்
Ramanathapuram district fisherman

By

Published : Jun 16, 2020, 12:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர்(40), மலர் (41), கல்லூரி மாணவன் ஆனந்த்(22) ,ஜேசு (48) ஆகிய நான்கு பேர் கடந்த 13ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் மூன்று நாள்களாகியும் கரை திரும்பவில்லை.

இதனையடுத்து சக மீனவர்கள் தேடிச்சென்றும் அவர்கள் குறித்த தகவலின்றி கரை திரும்பியதால், ராமேஸ்வரம் துறைமுகப்பகுதியில் பதட்டம் நீடித்தது.

இந்நிலையில், நடுக்கடலில் படகு மூழ்கியதால் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிவந்த சேசு என்ற மீனவரை மீட்டு புதுக்கோட்டை மாவட்ட கோட்டைபட்டினம் மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்துள்ளனர். மற்ற மூன்று பேரின் நிலைகுறித்து தகவல் கிடைக்காததால் உறவினர்களிடையே அச்சம் நீடித்துவருகிறது. மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details