தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம்: கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! - மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: தேங்காய்பட்டணம் துறைமுக பொழிமுகத்தில் இரண்டு மீனவர்கள் மாயமானதால், நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி கண்டன போராட்டம் நடத்தினர்.

கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயம்: கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
Fisherman protest in kanniyakumari

By

Published : Jul 25, 2020, 8:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் துறை முக பொழிமுகத்தில் மீன் பிடிக்கச் சென்ற முள்ளுர் துறையைச் சேர்ந்த அந்தோணி (60), மார்த்தாண்டம் துறையைச் சேர்ந்த ஷிபு (24)ஆகியோர் பொழிமுகத்திலுள்ள கற்களில் மோதி மாயமாகினர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீனவர்களின் உடலை தேடியும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மீனவர்கள் இன்று துறைமுகத்திலிருந்து படகுகள் மூலமாகவும், ஊர்வலமாகவும் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது போன்ற விபத்துகளுக்கு காரணமான பொழிமுகத்தில் உள்ள மணல் திட்டுகளை அகற்றவும், அதற்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாயமான மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details