நாகை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக கடந்த சில நாள்களாக பிரச்னை நிலவி வருகிறது. சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அனுமதி வழங்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக இரு தரப்பினரிடையே அவ்வப்போது சில மோதல்களும் நடக்கின்றன. அரசு தரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது, அதற்கு பதிலாக அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு மூன்று மாற்று திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள 54 மீனவ கிராம மீனவ பிரதிநிதிகளை அழைத்து அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தையானது இரவு 10 மணி மேலும் தொடர்ந்து வருகிறது.