திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பெருந்தொற்று பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு துணை ஆட்சியர் அபராதம் - முக கவசம் அணியதவர்களுக்கு அபராதம்
திண்டுக்கல்: மீன் மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாவட்ட துணை ஆட்சியர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் சோலை கால் பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கிவருகின்றது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கொண்டு வரக்கூடிய மீன், இறால் விற்பனை செய்வது வழக்கம். தற்போது கரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுமக்கள் சனிக்கிழமையே தங்களுக்குத் தேவையான மீன் வகைகளை வாங்குவதற்காக மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
இந்நிலையில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூடுவதை அறிந்த துணை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்கள் இவ்வாறு ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாக கூடக்கூடாது என்றும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் அங்கு வந்தவர்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.