தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனாவால் சேலம் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு - First corona death in Salem

சேலம்: கரோனாவால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளரின் மனைவி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

corona patient died in salem GH
corona patient died in salem GH

By

Published : Jun 14, 2020, 8:58 PM IST

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார் . இவரின் மனைவி கவிதா(43). தையல் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 13) காலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த கவிதா, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இவ்வேளையில் இன்று (ஜூன் 14) காலை 6.30 மணிக்கு கவிதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்.

கவிதாவுக்கு முன்னதாக ஆஸ்துமா கோளாறு இருந்துள்ளதாகவும், அதனால் அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா கிருமித் தொற்றால் சேலம் மாவட்டத்தில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details