கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஜோகிப்பட்டியில் பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆயீஷா, அமீத் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இம்ரான், அன்வர் ஆகிய இரண்டு பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு குடோனில் தீ விபத்து; இரண்டு பேர் பலி! - கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு குடோனில் தீ விபத்து; இரண்டு பேர் பலி!
மொத்தம் 13 பேர் குடோனில் வேலை செய்து வந்த நிலையில், நான்கு பேர் மட்டும் தீ விபத்தில் சிக்கியுள்ளனர். உயிரிழந்த இருவரின் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர். மற்ற ஒன்பது பேரில் ஏழு பேருக்கு லேசான காயத்துடனும், இரண்டு பேர் பலத்த காயங்களுடனும் அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.