தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இருசக்கர வாகன கிருமி நாசினி தெளிப்பான் மூலம் சுத்தம் செய்த தீயணைப்புத் துறையினர்!

சென்னை: தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவை இருசக்கர வாகன காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் மூலம், தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.

இருசக்கர வாகன காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் மூலம் தி.நகரை சுத்தம் செய்த தீயணைப்பு துறையினர்.
இருசக்கர வாகன காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் மூலம் தி.நகரை சுத்தம் செய்த தீயணைப்பு துறையினர்.

By

Published : Jun 4, 2020, 8:38 PM IST

தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கரோனா தடுப்புப் பணிக்காக ஸ்கை லிஃப்ட் இயந்திரம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கிருமி நாசினி மருந்தை தெளித்து சுத்தப்படுத்தி வந்தனர்.

ஆனால், ஸ்கை லிஃப்ட் இயந்திரத்தை குறுகிய சாலைகளில் கொண்டு சென்று, கிருமி நாசினி மருந்தை தெளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா தடுப்புப்பணிக்காக, கிருமி நாசினி மருந்தை தெளித்து, சுத்தப்படுத்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு 25 இருசக்கர வாகன கிருமி நாசினி தெளிப்பான்கள் வழங்கினர்.

இந்த இருசக்கர வாகனங்களில் காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு மணி நேரத்தில் 1,620 லிட்டர் கிருமிநாசினி மருந்தை தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ராயபுரம் பகுதிகளில் 13 இருசக்கர வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள், கிருமி நாசினி மருந்தை தெளித்து சுத்தப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகர், தீயணைப்புத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள இருசக்கர வாகன காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் மூலம் அதிக மக்கள் கூடும் இடங்களான தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடைகளில் 6 இருசக்கர வாகனங்களில் கிருமி நாசினி மருந்தை தெளித்து, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுத்தப்படுத்தினர்.

இதேபோல் சென்னையில் உள்ள அனைத்து குறுகிய சாலைகளும்; இந்த இருசக்கர வாகன கிருமி நாசினி தெளிப்பான் மூலம் சுத்தப்படுத்தப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details