திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அதிக வியாபாரம் மிகுந்த பகுதியாக கருதப்படும் காட்டுக்கொல்லைத்தெருவில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான ராதா டிரேடர்ஸ் எனப்படும் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், திடீரென பல்பொருள் அங்காடியில் தீ பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து நாகராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.