தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கருந்திரி வெடி விபத்து - தம்பதி படுகாயம்! - அருப்புக்கோட்டை காவல்துறையினர்

விருதுநகர்: கருந்திரி தயாரிக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டதால், தம்பதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Fire accident
Fire accident

By

Published : Jun 24, 2020, 7:07 PM IST

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர், ஏழாவது தெருவில் கந்தவேல் அவரது மனைவி மாரியம்மாள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வீட்டில் வைத்து தடை செய்யப்பட்ட கருந்திரியை தயார் செய்து வருகின்றனர். இன்று (ஜூன் 24) காலை கணவர் தேநீர் கேட்டார் என்று, அடுப்பில் தேநீர் தயாரித்து கொடுக்கும்போது துணியில் தீப்பிடித்துள்ளது.

இதனைப் பார்த்த மாரியம்மாள் பயத்தில், அந்த துணியை தூக்கி எறிந்தபோது, அந்த தீ பற்றிய துணி கருந்திரி மேல் விழுந்தது. உடனே, வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. இதனால் காயமடைந்த இருவரும் கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர், அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக வந்து தண்ணீர் ஊற்றி அணைத்து அவர்களைக் காப்பாற்றி, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details