தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2020, 3:20 AM IST

ETV Bharat / briefs

காகித ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: கட்டுப்படுத்திய 100 தீயணைப்பு வீரர்கள்!

திருவள்ளூர்: சோழவரம் அருகே காகித ஆலையில் 7 மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்துவிட்டு எறிந்த தீயை 100 தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.

காகித ஆலையில் தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த சிறுனியம் பகுதியில் உள்ள காகித ஆலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காகித சுருள்கள், இயந்திரங்கள் என அனைத்தும் முழுமையாக எரிந்து நாசமாகின.

செங்குன்றம், மாதவரம், செம்பியம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 7 மணி நேரமாக தீ கொளுந்து விட்டு எரிந்தது எனினும் தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு துறை இணை இயக்குநர் ப்ரியா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் அருகில் உள்ள ஆங்காடு கிராமத்தில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்த வர நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திர பாபு, தீயை அணைக்க பிராண்டோ ஸ்கை லிப்ட்டில் தானே ஏறி தீயணைக்க முற்பட்டார்.எனினும் தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பல மணிநேரம் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஒருவழியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details