தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2020, 1:31 AM IST

ETV Bharat / briefs

தவணை கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் - கால் டாக்ஸி உரிமையாளர்கள் புகார்

ஈரோடு: தனியார் நிதி நிறுவனங்கள் தவணை தொகை கேட்டு மிரட்டுவதாக கால் டாக்ஸி உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

தவணை கேட்டு மிரட்டும் நிதிநிறுவனங்கள் -கால்டாக்ஸி உரிமையாளர்கள் புகார்
தவணை கேட்டு மிரட்டும் நிதிநிறுவனங்கள் -கால்டாக்ஸி உரிமையாளர்கள் புகார்

கரோனா ஊரடங்கு முடியும்வரை கால் டாக்ஸி உரிமையாளர்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள் தவணை தொகை கேட்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கால் டாக்ஸி உரிமையாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோட்டில் தமிழ்நாடு அனைத்து கால் டாக்ஸி உரிமையாளர் நலச்சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் கரோனா காலத்தில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் எங்களது கால் டாக்சி நிறுவன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நலிவுற்று இருக்கிறது என்றும் இதுபோன்ற சூழலில் அரசு வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி இருந்தாலும் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று கால் டாக்சி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் இறப்பு, மருத்துவம் மற்றும் திருமணம் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் இ பாஸ் வழங்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஈரோட்டில் சரியான காரணம் சொல்லி விண்ணப்பித்தாலும் அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்துவிடுகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட 2 கார்ப்பரேட் நிறுவனங்கள் இருநூறு முன்னூறு வண்டிகளை வைத்து சுலபமாக இ பாஸ் பெற்றுக்கொண்டு வெளியூருக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமாக இருக்கிறது என்று புரியவில்லை போலி இ பாஸ் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்றுவருகிறார்கள். இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணைத் தொகையை மாதா மாதம் கட்ட சொல்லி தனியார் நிதி நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கிறார்கள், ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள கால அவகாசத்தை தனியார் நிதி நிறுவனங்கள் ஏற்பதில்லை மேலும் தவணைத் தொகையை உடனடியாக கேட்டு எங்களை மிரட்டுகிறார்கள் தவறும்பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்து விடுகிறார்கள். எனவே அரசு ஊரடங்கு காலம் முடியும்வரை கால் டாக்சி உரிமையாளர்களிடம் தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என்று தனியார் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு போட வேண்டுமென்றும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details