தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மாவட்டம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியீடு! - இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெலியீடு

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டனர்.

மாவட்டம் முழுதும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியீடு
மாவட்டம் முழுதும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியீடு

By

Published : Jan 20, 2021, 8:46 PM IST

நாமக்கல் மாவட்டம்:

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜன.20) மெகராஜ் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கூறியதாவது, “மாவட்டத்திலுள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் 7 லட்சத்து 1 ஆயிரத்து104 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 39 ஆயிரத்து 937 பெண் வாக்காளர்கள், 160 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்

இதில் ஆண் வாக்காளர்களை விட 38 ஆயிரத்து 833 பெண் வாக்காளர் அதிகமாக உள்ளனர். மேலும் 24 ஆயிரத்து 39 நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 18 வயது பூர்த்தியடைந்த 30 ஆயிரம் இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் ‌இருக்கின்றனர். அவர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட முன்வர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன.20) இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டார்.

திருவண்ணாமலையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்

புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கல் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 13 ஆயிரத்து 774 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 55 ஆயிரத்து 220 பேர், இதர வாக்காளர்கள் 97 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

கரூர் மாவட்டம்:

தமிழ்நாட்டில் வருகின்ற 2021ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்) மலர்விழி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன் வெளியிட்டார்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 2 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 12 ஆயிரத்து 1 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 7 என மொத்தம் 21 லட்சத்து 31 ஆயிரத்து 10 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கரூரில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்

கரூர் சட்டப்பேரவை தொகுதியில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 34 ஆண் வாக்காளர்கள் , 12 லட்சத்து 83 ஆயிரத்து 21 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 19 என மொத்தம் 24 லட்சத்து 41 ஆயிரத்து 74 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டம்:

நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். இதில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 49 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நீலகிரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்

ராமநாதபுரம் மாவட்டம்:

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று மாவட்டந்தோறும் வெளியிடப்படுகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் 'தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்' வெளியிட்டார்.

ராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 58 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 57 லட்சத்து 63 ஆயிரத்து 43 ஆண் வாக்காளர்கள், 58 லட்சத்து 11 ஆயிரத்து 32 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சலசலப்பு

ABOUT THE AUTHOR

...view details