தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தோல்வியுற்ற ஜப்பான்; ஆறுதல் கூறிய நெதர்லாந்து வீராங்கனைகள் - ஜப்பான் - நெதர்லாந்து

மகளிர் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டி முடிந்தப் பிறகு, நெதர்லாந்து வீராங்கனைகள், ஜப்பான் அணியை ஆறுதல் செய்த நெகிழ்ச்சி சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தோல்வியுற்ற ஜப்பான்; ஆற்றுப்படுத்திய நெதர்லாந்து வீராங்கனைகள்

By

Published : Jun 26, 2019, 5:36 PM IST

மகளிர் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற நாக் அவுட் சுற்று போட்டியில், ஜப்பான் - நெதர்லாந்து அணிகள் மோதின. இதைத்தொடர்ந்து, நெதர்லாந்து வீராங்கனை மார்டின்ஸ் பேக் ஹீல் மூலம் கோல் அடித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜப்பான் வீராங்கனை ஹஸேகாவா (Hasegawa) அபாரமாக கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதியில் ஜப்பான் அணிக்கு கிடைத்த வாய்ப்பை கோலா மாற்ற தவறியது. இதையடுத்து, ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், நெதர்லாந்து அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதை, மார்டின்ஸ் கோலாக மாற்ற, நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது.

இதைத்தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் இப்போட்டியில் தோல்வி அடைந்ததை எண்ணி ஜப்பான் வீராங்கனைகள் களத்தில் கண்ணீர் வடித்தனர். இதைப்பார்த்த நெதர்லாந்து வீராங்கனைகள், அவர்களை ஆரத்தழுவி சமாதானம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details