ஈரோடு கடைவீதி பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி சந்தை மிகவும் குறுகலானதாகவும், காற்றோட்டமும் இல்லாத காரணத்தினால் நோய்ப்பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தினசரி சந்தை, தற்காலிகமாக ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்தது.
இதனிடையே பேருந்துகள் இயக்கப்பட்டதன் காரணமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி சந்தை தற்காலிகமாக ஈரோடு வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதான வளாகத்திற்கு மாற்றப்பட்டது. சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 700 காய்கறிகள், பழக்கடைகளுக்கு குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கப்பட்டு கடந்த 20 நாள்களாக காய்கறிச் சந்தை செயல்படத் தொடங்கியது.