தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மேட்டுப்பாளையத்தில் அழுகிய நிலையில் பெண் யானை மீட்பு - kavai elephant death

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் பெண் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Female elephant rescue in Mettupalayam
Female elephant rescue in Mettupalayam

By

Published : Jun 2, 2020, 6:54 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகம், கல்லார் காப்புக்காடு, இருட்டுப்பள்ளம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்படிருந்த போது பாறை இடுக்கில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் சுமார் 20 அடி பள்ளத்தில் 5-7 வயதுடைய பெண் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

இதையடுத்து, உடனடியாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர், மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆசோசனையின் படி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், மேட்டுப்பாளையம் வனசரக அலுவலர் செல்வராஜ், கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த பெண் யானையை ஆய்வு செய்துள்ளனர்.

அவர்கள் செய்த ஆய்வில் தண்ணீர் குடிப்பதற்காக பாறையின் மேல் இருந்து இறங்க முயன்றபோது சறுக்கி விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் நடந்து சில நாள்கள் ஆனதால் யானையின் மேற்புற தோலானது அழகி துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது என்று தெரிவித்தனர். அதன் பின்னர் கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details