தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'இந்தியாவின் இதயத்துடிப்பு' - ஈடிவி பாரத்தின் சிறப்பம்சங்கள்

ஊடகத்துறையில் நவீனத்தன்மையுடன் இந்தியாவின் 13 மொழிகளில் இன்று களமிறங்கிய ஈடிவி பாரத்தின் சிறப்பம்சங்களின் தொகுப்பு.

ETV Bharat

By

Published : Mar 21, 2019, 1:50 PM IST

Updated : Mar 21, 2019, 4:14 PM IST

வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் ஊடகத்தின் பரிணாம வளர்ச்சி வியப்பில் ஆழ்த்தும்! ஒவ்வொரு படியிலும் தொழில்நுட்ப முன்னேற்றமும், நவீனத்துவமும் துரிதமுமானது. இன்று, நவீன தொழில்நுட்பத்திலான ஸ்மார்ட் ஃபோன்கள், கேட்ஜஸ்ட்களால் - உடனடிச் செய்திகளின் எதிர்பார்ப்பு... காலத்தின் கட்டாயமாகியுள்ளது. ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும் ராமோஜி குழுமம், தற்போது 'டிஜிட்டல் ஊடகத்தில்' மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்த உள்ளது! ஊடகத்துறையில் வெற்றித்தடம் பதித்த ராமோஜி குழுமத்திலிருந்து வெளிவரும் ஈநாடு செய்தித்தாள் - இந்தியாவில் அதிக விற்பனையாகும் நாளேடாகும்.

ஈடிவி ஊடகக் குழுமம், சார்பின்றி - நடுநிலையான செய்திகளையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. மக்கள் சேவையை பிரதானமாகக் கொண்டு இயங்கி வரும் எங்கள் ஊடகக் குழுமம் - பெருமையுடன் வழங்கும் புதிய படைப்பு... 'ஈடிவி பாரத்!' ஈடிவி பாரத், தேசிய அளவிலான செய்திகளையும், தகவல் சார் பொழுதுபோக்கு அம்சங்களையும் பரந்து விரிந்து வழங்கும் ஒரு டிஜிட்டல் தளமாகும். செய்திகளையும் தகவல்களையும், எழுத்து வடிவிலும் காட்சி வடிவிலும் அளிப்பதை பிரதானமாகக் கொண்ட மொபைல் அப்ளிகேஷனாகவும், வலைதளமாகவும் 'ஈடிவி பாரத்!' வலம் வர உள்ளது!

நாடு முழுவதும் பிரத்யேக செய்தியாளர்களைக் கொண்டு, ஆழமாக தொகுக்கப்பட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்குவது - ஈடிவி பாரத்தின் தனிச்சிறப்பாகும்! அண்மை நிகழ்வுகளை... பேச்சரங்கமாகவும், வல்லுநர்களின் கலந்துரையாடல்களாகவும், செய்தி தயாரிப்பாளர்களின் விவாத மேடைகள் முதல் செய்தியறை நேரலை வரை மக்களின் குரலை களத்திலிருந்து பதிவு செய்கிறது ஈடிவி பாரத். விரிவான அலசல்களுடன் செய்திகளைத் தருவதோடு, பல்வேறு பிரிவுகளில் அறிக்கைகளாகவும் வழங்குகிறது ஈடிவி பாரத்.

அரசியல், சமூகம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், நிர்வாகம், கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, தொழில், பொருளாதாரம், விளையாட்டு, வணிகம், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு என ஆண்கள் பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் செய்திகளை வழங்கவுள்ளது ஈடிவி பாரத். நம்பகத்தன்மையை நிலைநாட்டும் வகையில், உண்மைத்தன்மையுடன் ஈடிவி பாரத் செயல்படும்.

ஈ-டிவி பாரத்

தேசம் முதல் சர்வதேசம் வரை பன்முகத் தன்மையுடன். மாநில, மாவட்ட, ஏன்? சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவும்கூட செய்திகளை கடைக்கோடிவரை கொண்டு சேர்க்கிறது ஈடிவி பாரத் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிரத்யேக செய்தியாளர்களைக் கொண்டு மிக பெரிய செய்தி சேகரிப்பு நிறுவனமாக உருவெடுக்க உள்ளது ஈடிவி பாரத். திறமைமிக்க ஆசிரியர்களும் அர்ப்பணிப்புள்ள ஊடகவியலாளர்களும் செய்தித் தயாரிப்பை மேம்படுத்துவர்.

ஈடிவி பாரத் செய்திகள், இந்தி, உருது, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, அஸ்ஸாமி, ஒடியா ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கும். உயர்தர நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மின்னல் வேகத்தில் செய்திகளை நாள் முழுவதும், வழங்குகிறது ஈடிவி பாரத் பயனாளர்கள் இனிமையாகவும் எளிமையாகவும் இயக்கும் வகையிலும், செய்திகளை பதிவிறக்கம் செய்து - பிறகு பார்த்துக்கொள்ளும் வகையிலும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

செய்திக் காட்சிகளின் துல்லியம் இணைய வேகத்துக்கு ஏற்றார்போல் - தன்னிச்சையாக தகவமைத்துக்கொள்ளும் வசதியை பயனாளர்களுக்கு வழங்குகிறது. மக்களுக்காக குரல் கொடுக்கும் செய்தி ஊடகமான ஈடிவி பாரத், மக்களின் குரலையே நேரடியாக ஒலிக்கச் செய்கிறது! எனவே உள்ளூர் மக்களின் குரல்களை அவர்களே நேரடியாகப் பதிவு செய்யவும் வழிவகை செய்கிறது. செய்தி நேரம் - நிகழ்வுகளையும் கூடுதல் தகவல்களையும் உடனுக்குடன் மேம்படுத்தி 5 நிமித்துக்கு ஒருமுறை நேரலை செய்திகளாக நாள்முழுவதும் ஒளிபரப்பப்படும். பயனாளர்கள் எங்கே இருந்தாலும், செய்திகளை அவர்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கும் - இந்த செய்தி நேரம்!

ஒரே செயலியில் 27 செய்தித் தளங்களை தனித்தனியாக வழங்குகிறது ஈடிவி பாரத்! 29 மாநிலங்களுக்கான செய்திகளையும் தகவல்களையும் 13 இந்திய மொழிகளில் வழங்குகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு நேரலைகளை வழங்குவதே ஈடிவியின் தனித்துவம்! தேசத்தின் பல்வேறு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பயனாளர்கள் எங்கிருந்தும் பெற முடியும். பலதரப்பட்ட தேசிய செய்திகளையும் தகவல்களையும் டிஜிட்டல் தளத்தில் தரமான முறையில் வழங்குவதால், கோடிக்கணக்கான மக்களின் நாடித்துடிப்பில் இணையவுள்ளது ஈடிவி பாரத்!

Last Updated : Mar 21, 2019, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details