சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு இன்று பலரும் தங்களது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
தந்தையர் தினம்- வாழ்த்து தெரிவித்த ஷ்ரதா கபூர் - சர்வதேச தந்தையர் தினம்
தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஷ்ரதா கபூர் தனது அப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஷ்ரத்தா கபூர்
அந்தவகையில் நடிகை ஷ்ரதா கபூர் தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், “நீங்கள்தான் எனது வலிமை, என் ஆதரவு. எப்போதும் என் பக்கத்திலேயே இருங்கள்.
நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளால் ஒருபோதும் சொல்ல முடியாது. விலைமதிப்பற்ற அப்பா நீங்கள். இனிய தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா” என்று பதிவிட்டுள்ளர்.