கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு (35) வித்யா (32) என்ற மனைவியும் 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
கணவன்- மனைவி குடும்பத்தகராறு காரணமாக வித்யா தனது கணவனை பிரிந்து இரணியலில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மகளை பார்ப்பதற்கு இரணியலில் உள்ள மனைவி வீட்டிற்கு ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (ஜூன் 30) சென்றுள்ளார். அங்கு மகளை பார்ப்பதற்கு மனைவி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெற்ற மகளை பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கத்துடன் வீட்டிற்கு மனவருத்தத்துடன் வந்த ராதாகிருஷ்ணன், தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.