நாகப்பட்டினம் செம்பனார்கோவில் அருகே உள்ள ஆக்கூரைச் சேர்ந்தவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மருத்துவமனைக்கு வந்து காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் தந்தை, மகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது.
இதையடுத்து, மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமி தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.