விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (27). இவரது மனைவி தங்கபுஸ்பம் (26). காளிராஜ் வேலைக்கு ஏதும் செல்லாமால் சுற்றி திரிந்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பச் சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இச்சூழ்நிலைக் காரணமாக இவரது மனைவி அருகில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று(ஜூலை 21) மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தைகளான மாரிஸ்வரன்(5), காயத்ரி(4) ஆகிய இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று காளிராஜ் கழுத்தை நெரித்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தங்கபுஷ்பம் தனது குழந்தைகள் தூங்குவதாக நினைத்துள்ளார். பின்னர் இரண்டு பேரையும் எழுப்பும் போதும்தான் குழந்தைகள் இறந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இரண்டு குழந்தைகளின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.