தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நரியங்குடி பாசன பகுதிக்கு வந்த காவிரி நீர் - விவசாயிகள் நெல்மணி தூவி வரவேற்பு - Mettur dam

நாகப்பட்டினம்: நரியங்குடி கடைசி ரெகுலேட்டர் பாசன பகுதிக்கு வந்த காவிரி நீரை, விவசாயிகள் நெல்மணி தூவி வரவேற்றனர்.

Farmers who welcomed Cauvery water
Farmers who welcomed Cauvery water

By

Published : Jun 28, 2020, 12:27 AM IST

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது 17 நாட்களுக்குப் பின்னர் நாகை மாவட்டம் நரியங்குடி கடைசி ரெகுலேட்டர் பாசனத்திற்கு வந்து சேர்ந்தது.

இதையடுத்து நரியங்குடி நீர் ஒழுங்கிக்கு வந்த காவிரி நீரை, கடலோரப் பாசனப் பகுதிகளுக்கு நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிக்குமார் நெல்மணி தூவி ரெகுலேட்டரிலிருந்து திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவிரி நீரை கண்ட விவசாய பெண் தொழிலாளர்கள் கும்மி அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நரியங்குடி நீர் ஒழுங்கியிலிருந்து கிளை வாய்க்கால் மூலம் திறந்து விடப்படும் காவிரி நீரை பயன்படுத்தி, பாப்பாகோயில், அகர ஒரத்தூர், ஒரத்தூர், சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ளவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details