தென்காசி மாவட்டம் சிவகாமிபுரம், அருணாபேரி, சங்கரன்கோவில், செங்கோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, கனகாம்பரம், கேந்தி, ரோஸ் , சம்பங்கி, அரளிப் பூ உள்ளிட்ட பூக்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவி வருவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக நீட்டிக்கப்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்கள் முடங்கி காணப்படுகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பூக்களின் சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால், விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பூக்கள், மாலைகள் வியாபாரமும் இல்லாமல் விவசாயிகளும்,வியாபாரிகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.