டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 கிராமங்களுக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் விளமல் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் காப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் - Thiruvarur district news
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 கிராமங்களுக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 வருவாய் கிராமங்களுக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், தன்னிச்சையாகச் செயல்பட்டு ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் வேளாண் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டுதோறும் அறுவடை ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் ஒப்புதல் பெற்ற பின்னர் இழப்பீடு தொகையை இறுதி செய்வதை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.