தமிழ்நாடு அரசு மின் தொடரமைப்பு கழகம் அமைக்கவிருக்கும் விருதுநகர்-கோவை ஆகிய பகுதிகளில் 765 கே.வி. உயர் மின் கோபுர திட்டத்திற்கு மின் கோபுரம் அமைப்பது, காவுத்தம் பாளையத்தில் 180 ஏக்கர் பரப்பில் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கும் கருத்தரங்கு கூட்டம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை அடுத்து ரெட்டியபாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர், பாதிக்கப்படும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.