விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (50).விவசாயியானஇவர், நேற்றிரவு அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தனது வீட்டு கொட்டகையில் மாடுகளைப் பிடித்து கட்டிக்கொண்டிருந்தார்.
மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு; விழுப்புரத்தில் சோகம் - கனமழை காரணமாக மின்னல் தாக்கியது
விழுப்புரம்: மரக்காணம் அருகே மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கியதில் விவசாயி மரணம்
அப்போது, எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் ஆறுமுகம் அதே இடத்தில் உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.