தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சட்ட நகல் எரிப்பு போராட்டம்! - Tirupur district news

திருப்பூர்/ நாகை : மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்ட நகல் எரிப்பு போராட்டம்!
சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

By

Published : Jun 10, 2020, 9:34 PM IST

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் அவசரக் கூட்டம் 2020ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், அத்தியாவசியப் பொருள்கள் தடை சட்டத்தை நீக்கக் கூடாது, எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின் படி விவசாய உற்பத்திப் பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்ட நகல் எரிப்பு போராட்டம்!
சட்ட நகல் எரிப்பு போராட்டம்!

இதேபோன்று, திருப்பூரில், சட்டத் திருத்தம், அவசரச் சட்டங்கள் ஆகியவை விவசாயிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்தம், விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் ஒப்பந்தம், அவசரச் சட்டம் 2020 ஆகிவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details