கோவை மாவட்டம் அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், விவசாயியான இவர் தனது நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாரை மாற்றுவதற்காக நேற்று அதனை மாற்றும் பணி நடைபெற்றுள்ளது.
அப்போது கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் கருப்பு நிறமாக மாறி இருந்ததாலும் மேலும் அதிலிருந்து வந்த தண்ணீர் அனைத்தும் கருப்பு நிறமாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
10 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட வெண்மை வண்ண பைப்புகள் கருப்பு மற்றும் பழுப்பு நிறமாக மாறி இருப்பதால் நிலத்தடி நீரில் ரசாயனம் கலந்திருக்கலாம் எனக்கூறிய சண்முகம், அரசூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் அவர்கள் யாரேனும் ஆழ்துளைக் கிணறு மூலம் ரசாயனம் கலந்த நீரினை நிலத்துக்கடியில் விட்டிருக்கலாம், இதனால் நீரின் தன்மை மாறியிருக்கலாம் என சந்தேகித்துள்ளார்.