தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

உதகையில் விவசாயி தற்கொலை செய்த விவகாரம்: இரண்டு எஸ்.ஐ பணியிடமாற்றம்! - நீலகிரியில் இரண்டு எஸ்.ஐ பணியிடமாற்றம்

நீலகிரி: காவல் துறையினர் தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், உதவி காவல் ஆய்வாளர்கள் இருவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Two Supinspector transferred in Nilagiris
Two Supinspector transferred in Nilagiris

By

Published : Aug 22, 2020, 2:17 AM IST

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள புது வீடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(38). இவர் விவசாயம் செய்து வந்தார். கடந்த வாரம் சீனிவாசன் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றதாகக் கூறி, தேனாடு கம்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை காவலர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தேனாடு கம்பை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமார் கூடலூர் அருகே உள்ள எருமாடு காவல் நிலையத்திற்கும், எஸ்.எஸ்.ஐ., லோகநாதன் காந்தள் ரூரல் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details