தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஜியோ இயங்குதள 9.9% பங்குகளை ஜாது ஹோல்டிங்ஸ் மூலமாக பெறுகிறது பேஸ்புக்! - ரிலையன்ஸ் நிறுவன பங்குகள்

முன்னதாக பேஸ்புக் நிறுவனம், 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயங்குதளத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை ஜாது ஹோல்டிங்ஸ் மூலமாக பெறவுள்ளது.

facebook
facebook

By

Published : Jun 4, 2020, 12:16 PM IST

உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், ஜியோவின் 9.9 விழுக்காடு பங்குகளை 44 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. மொத்தமாக கிடைக்கப்பெற்ற 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பயன்படுத்தி ஜியோ சாவன், ஜியோ சினிமா, ஹாப்டிக், ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் உள்ளிட்ட வணிக பிரிவுகளின் வர்த்தகத்தை பெருக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயங்குதளத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை ஜாது ஹோல்டிங்ஸ் மூலமாக பேஸ்புக் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை மட்டுமல்லாமல், சவுதி அரேபியாவின் ஆரம்கோ உட்பட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியில் ரிலையன்ஸ் உள்ளது. இப்படி வரும் முதலீடுகள் மூலமாக, ரிலையன்ஸ் விரைவில் கடன் இல்லா நிறுவனமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details