கோவிட்-19 பரவல் அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் மற்றும் முகக்கவசங்களை மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.