முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எம்இ, எம்டெக், எம்ஆர்க் ஆகிய முதுகலை பொறியியல் படிப்பில் மாணவர்கள் 2020-21ஆம் கல்வி ஆண்டில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன.
முதுகலை பொறியியல் படிப்பில் சேர கால நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை மாவட்ட செய்திகள்
சென்னை: முதுகலை பொறியியல் படிப்பில் சேர கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
![முதுகலை பொறியியல் படிப்பில் சேர கால நீட்டிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா பல்கலைக்கழகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:34:44:1600085084-tn-che-08-tanca-application-date-extended-script-7204807-14092020172957-1409f-02186-566.jpg)
அண்ணா பல்கலைக்கழகம்
மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக செப்டம்பர் 30 ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.