தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 21, 2020, 4:39 AM IST

ETV Bharat / briefs

அரசு இசைக்கல்லூரியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: அரசு இசைக் கல்லூரியில் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு, பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு 07.09.2020 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

Extended Of Music Colleage Application
Extended Of Music Colleage Application

கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் நான்கு அரசு இசைக் கல்லூரிகளும், சென்னை மற்றும் கும்பகோணத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்லூரிகளில் 2020-2021ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் 26.7.2020 அன்று நாளிதழ்களில் விளம்பர செய்தியாக வெளியிடப்பட்டு, 27.07.2020 முதல் 17.08.2020 வரை கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) விண்ணப்பிக்க (online Application) கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் பெற்று விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு 07.09.2020 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.

அரசு இசைக் கல்லூரிகளில் இசையாசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பின்னர் தெரிவிக்கப்படும். இதனை கலை பண்பாட்டுத் துறை இணையதள முகவரியிலும் (www.artandculture.tn.gov.in) மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details