விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத் தோப்பு பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
குறிப்பாக புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், கொடிய விஷமுள்ள ராஜநாகங்கள், மிகப்பெரிய அளவிலான மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், 10 அடி நீளம் உள்ள ராஜநாகம் செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்தது.