திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை நேரில் சந்தித்த அவர் திமுக சார்பில் கோரிக்கை மனுவொன்றையும் கையளித்தார்.
அம்மனுவில், "திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. ஆகையால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தேவையான அளவு பரிசோதனை கருவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு முகக் கவசங்கள், வைரஸ் தடுப்பு உடைகள், கிருமிநாசினிகள் வழங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் மத்தியில் கரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.