இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய துணைக் கண்டத்திலேயே அதிகமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில்தான் என ஆணித்தனமாக பதிவிட்டு கூறியுள்ளனர். அறிகுறி உள்ளவர்கள் யாருக்காவது கரோனா பரிசோதனை செய்யவில்லை என ஸ்டாலின் ஆதாரத்தோடு கூறி இருந்தால் அதில் பொருள் இருக்கிறது.
மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாதது அமைச்சர்களையும் பாதிக்கும் - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா - Essential items
மதுரை: பொதுமக்கள் தகுந்த இடைவெளியை சில சமயங்களில் பின்பற்றாததால் அமைச்சர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
மேலும் அறிகுறி இருப்பவர்களைத் தவிர பரிசோதனை எடுக்க விரும்புபவர்களுக்கும் தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பரிசோதனை நிலையங்களும் அதிகரித்து வருவதால் ஸ்டாலின் கூறுவதில் அர்த்தமில்லை.
கரோனா நோய் தொற்று ஏற்றத் தாழ்வுடன் வருவது இல்லை. அமைச்சர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். மக்களுக்காக பணியாற்றும் போதும், மக்களுடன் இணைந்து செயலாற்றும் பொழுது அமைச்சர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றினாலும் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை சில சமயங்களில் பின்பற்றாததால் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. என இவ்வாறு தெரிவித்தார்.