மேலும் வழக்குகள் பதிவு செய்து முகக்கவசம் அணியாதவர்கள் மீது 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதமும் வசூலித்தனர்.
ஈரோட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு! - ஈரோடு முகக்கவசம் அபராதம்
ஈரோடு: முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக வாகனங்களில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்தனர்.
Face mask fine
ஈரோடு திருநகர் காலனி பகுதியில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீதும், நான்கு சக்கர வாகனங்களை இயக்குவோர் மீதும் வழக்குகள் பதிவு செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திருநகர் காலனிப் பகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது முகக்கவசம் அணியாமல் வந்ததற்கு வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
மேலும், இந்த நடவடிக்கையை மாவட்டம் முழுவதும் தொடர மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உத்தரவிட்டுள்ளனர்.