தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மின்சார திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு : மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode Formers protest
Erode Formers protest

By

Published : Jun 16, 2020, 2:26 PM IST

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இலவச மின்சாரம் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் 2020 மின்சார திருத்த சட்ட மசோதாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா இலவச மின்சாரத்திற்கு கட்டணம் கொண்டு வருவதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இம்முடிவை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு விரப்பன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு 2020மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும். உணவு தற்சார்பை காக்கும் பொருட்டு விவசாய மின்பயன்பாட்டு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மின் ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வழங்கிவரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்க கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

இதையும் படிங்க: சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details