தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அப்போது, வருவாய் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அவை தீர்த்து வைக்கப்படுவதுடன், கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்படுவது வழக்கம்.
அதன்படி, மாநிலம் முழுவதுமுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நேற்று (ஜூலை 7) தொடங்கியது. ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயத்தை ஆட்சியர் சி.கதிரவன் தொடக்கிவைத்தார்.