தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் - சென்னை

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்களுக்கு சணல் பையில் பூ, பழம், நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

வண்டலூரில் உலகச் சுற்றுலா தினம் கொண்டாட்டம்

By

Published : Jun 5, 2019, 11:40 PM IST

Updated : Jun 6, 2019, 9:01 AM IST

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் தொண்டு நிறுவனம், ரானே குழுமம் ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு கையேடுகள், மின் உதிரி பொருட்கள், கழித்தொதுக்குதல் மேலாண்மையால் ஏற்படும் விளைவுகள், மரம் வளர்ப்பு குறித்து பரப்புரை வழங்கப்பட்டது. பிற்பகலில் ரானே சூளுமு ஸ்டீரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பூங்கா நிர்வாகம் சார்பில் பார்வையாளர்களுக்கு பழம், பூ வகையான நாட்டு மரக்கன்றுகள், பாலித்தீன் பைகளுக்கு பதிலாக சணல் பையில் வழங்கப்பட்டது.

சுமார் 1200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஈடுபட்ட இந்தக் கொண்டாட்டத்தில் பூங்கா நிர்வாக சார்பில் இயக்குநர் யோகேஷ் சிங், துணை இயக்குநர் சுதா, உதவி இயக்குநர் சேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Last Updated : Jun 6, 2019, 9:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details