தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC19: ஆப்கானிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து..! - 2019 WorldCup

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

CWC19: ஆப்கானிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து

By

Published : Jun 19, 2019, 9:40 AM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக, கேப்டன் இயான் மோர்கன் 148, பெயர்ஸ்டோவ் 90, ஜோ ரூட் 88 ரன்களை விளாசினார்.

இதைத்தொடர்ந்து, 398 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி இப்போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹஷ்மத்துல்லாஹ் ஷஹிடி 76, அஸ்கர் ஆஃப்கான் 44 ரன்களை அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர், அடில் ரஷித் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருதை வென்ற மோர்கன்

இப்போட்டியில் 148 ரன்களை விளாசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details