தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

விருதுநகரில் மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம் - உரிய நிவாரணங்களை வழங்க விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர்: யானைகள் மா மரங்களை சேதப்படுத்தியதால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால், அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்க விவசாயிகள் கோரிக்கை
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால், அவற்றிற்கு உரிய நிவாரணங்களை வழங்க விவசாயிகள் கோரிக்கை

By

Published : May 31, 2020, 6:45 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மா, தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகளவு நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது மாங்காய் சீசன் என்பதால் மா மரத்தில் மாங்காய்கள் ஓரளவிற்கு விளைந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக் கோயில் பகுதியில் உள்ள விநாயகமூர்த்தி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி மாங்காய்களை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது.

இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் யானைகளை வனத்திற்குள் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details