தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

யானையைக் கொன்று தந்தம் திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை! - யானையை கொலைசெய்து தந்தத்தை திருடிச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த அஞ்செட்டி - உரிகம் காப்புக்காட்டு பகுதி பிலிக்கல் என்ற வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானையைக் கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள் அதன் தந்தத்தை திருடிச் சென்றுள்ளனர்.

யானையைக் கொன்று தந்தம் திருட்டு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!
Elephant killed in krishnagiri

By

Published : Jul 20, 2020, 9:11 PM IST

ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உரிகம் காப்பு காட்டு பகுதியிலுள்ள பிலிக்கல் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் தெரிந்தது.

இதனையடுத்து வனத் துறையினர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, மருத்துவக் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று அங்கேயே உடற்கூராய்வு செய்து புதைத்தனர்.

இதனைத்தொடர்ந்து யானையை தந்ததற்காக கொன்றார்களா அல்லது இயற்க்கையாக இறந்த பின் தந்தத்தை பிடுங்கி சென்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிலிக்கல் வனப்பகுதி கர்நாடக மாநில எல்லை அருகில் இருப்பதால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு யானைகள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details