தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் மனு! - மின்சார சட்ட திருத்த மசோதா

ஈரோடு: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Electricity Bill Amendment Bill  Farmers petition in erode
Electricity Bill Amendment Bill Farmers petition in erode

By

Published : Jun 4, 2020, 5:44 PM IST

ஈரோடு மாவட்ட இலவச மின்சார உரிமை பாதுகாப்பிற்கான கூட்டியக்கம் சார்பில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் துளசிமணி தலைமையில் வந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், இலவச மின்சார உரிமையை காக்க வேண்டும், தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவதற்கான ஒரு குதிரைத்திறனுக்கு ரூ. 20 ஆயிரம் வைப்புத்தொகையை ரத்து செய்ய வேண்டும்.

வேளாண் மின் இணைப்பு வேண்டி பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இனியும் காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், மத்திய அரசின் இந்த மசோதாவால் மாநில அரசின் இலவச மின்சாரம் வழங்கும் சலுகை அடியோடு பறிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details